மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் வழிப்பறி 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு + "||" + A woman who went with her husband to Mayiladuthurai Rs.

மயிலாடுதுறையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் வழிப்பறி 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

மயிலாடுதுறையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் வழிப்பறி 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
மயிலாடுதுறையில் கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் ரூ.59 ஆயிரத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது45). இவருடைய தம்பி பாஸ்கரன் (40). குமார் மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு குமார், அவருடைய தம்பி பாஸ்கரன் (40), பாஸ்கரன் மனைவி ராஜேஸ்வரி (35) ஆகிய 3 பேரும் ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். குமார் அவரது வேறு ஒரு நிறுவனத்துக்கு சென்று விட்டார். பாஸ்கரனும், அவருடைய மனைவி ராஜேஸ்வரியும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். காமராஜர் சாலையில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர்.


காயம்

அவர்கள் திடீரென பாஸ்கரன், ராஜேஸ்வரி சென்ற மோட்டார்சைக்கிளை வழிமறித்தனர். இதனால் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், ராஜேஸ்வரியிடம் இருந்த பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். அந்த பையில் ரூ.59 ஆயிரத்து 500 இருந்தது. இந்த சம்பவத்தில் ராஜேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். கணவருடன் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் : போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது- மதுரை ஐகோர்ட் கிளை
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
2. ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி 2 மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லிக்குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை
சீர்காழியில் ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வர தடை போலீசார் தீவிர சோதனை
வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வர போலீசார் தடை விதித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
5. காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் 30 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.