மாவட்ட செய்திகள்

அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தை முடிவு செய்வேன் - பங்கஜா முண்டே சொல்கிறார் + "||" + I will decide the future according to political changes Says Pankaja Munde

அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தை முடிவு செய்வேன் - பங்கஜா முண்டே சொல்கிறார்

அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தை முடிவு செய்வேன் - பங்கஜா முண்டே சொல்கிறார்
மராட்டியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தை முடிவு செய்வேன் என பங்கஜா முண்டே முகநூலில் பதிவிட்டுள்ளார்
அவுரங்காபாத், 

மராட்டியத்தில் பல்வேறு குழப்பங்கள், திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் மாநில மந்திரியும், கோபிநாத் முண்டேயின் மகளுமான பங்கஜா முண்டே வெளியிட்ட முகநூல் பதிவு பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது:-

மாநிலத்தில் மாறியுள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு முன்னோக்கி செல்லும் வழியை சிந்தித்து தீர்மானிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து என்னுடன் நான் பேசி சிந்திக்க நேரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் எனது எதிர்கால பயணம் முடிவு செய்யப்பட வேண்டும்.

அடுத்து என்ன செய்வது? எந்த பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்? மக்களுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நமது பலம் என்ன? மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? இந்த அம்சங்களைப் பற்றி சிந்தித்து டிசம்பர் 12-ந் தேதி உங்கள் முன் வருவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பீட் மாவட்டம் பார்லி தொகுதியில் போட்டியிட்ட பங்கஜா முண்டே தேசியவாத காங்கிரஸ் தலைவர் தனஞ்செய் முண்டேயிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கட்சியின் மீது அவர் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த திடீர் பதிவு கட்சி தாவலுக்கு அச்சாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் பாரதீய ஜனதா வட்டாரங்கள் இதை மறுத்துள்ளனர். கட்சியை பலப்படுத்த பங்கஜா முண்டே தொடர்ந்து செயல்படுவார் என அக்கட்சியினர் கூறியுள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...