மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம்: தலைமறைவான ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + School students to the sexual harassment: Police Hunt For Teacher

பள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம்: தலைமறைவான ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு

பள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம்: தலைமறைவான ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு
பள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தர்மபுரியை சேர்ந்த பிரகாஷ்குமார் (வயது54) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பள்ளி வகுப்பறையில் 2 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், வட்டார கல்வி அலுவலர் உமாராணி மற்றும் மகேந்திரமங்கலம் போலீசார் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பான அறிக்கையை, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஆசிரியர் பிரகாஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் மாணவிகளின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் பிரகாஷ்குமார் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, புகார் கூறப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும் தலைமறைவான ஆசிரியர் பிரகாஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புகாருக்குள்ளான ஆசிரியர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவிகளுக்கான தடகளம்: உயரம் தாண்டுதலில் சென்னை வீராங்கனை முதலிடம்
பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டியில், உயரம் தாண்டுதலில் சென்னை வீராங்கனை முதலிடம் பிடித்தார்.
2. பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகளம்: சென்னையில் நாளை தொடங்குகிறது
பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டிகள், சென்னையில் நாளை தொடங்க உள்ளது.
3. மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியாமல் போலீஸ் திணறல்: குண்டர் சட்டம் பாய்ந்தும் பயனில்லை
தேனி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்த போதிலும் அதனால், கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
4. பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டி - சென்னையில் நடக்கிறது
பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
5. டெல்லியில் போலீஸ்-வக்கீல்கள் மோதல்: நீதி விசாரணைக்கு உத்தரவு - ஐகோர்ட்டு நடவடிக்கை
டெல்லியில் போலீஸ்-வக்கீல்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.