எந்த பிரச்சினையானாலும் பொதுமக்கள் மனு வழங்கலாம் - கலெக்டர் சிவன்அருள் தகவல்


எந்த பிரச்சினையானாலும் பொதுமக்கள் மனு வழங்கலாம் - கலெக்டர் சிவன்அருள் தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2019 1:51 PM GMT (Updated: 2 Dec 2019 1:51 PM GMT)

எந்த பிரச்சினையானாலும் பொதுமக்கள் மனு வழங்கலாம் என்று கலெக்டர் சிவன்அருள் கூறினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் புதிதாக மாவட்டத்திற்கு பணி மாறுதல் வாங்கி வந்த அலுவலர்கள் கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் சிவன்அருள் பேசுகையில், திருப்பத்தூர் தனி மாவட்டமாக செயல்பட தொடங்கியுள்ளது. மக்களின் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்த வேண்டும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கால நேரம் பார்க்காமல் கடுமையாக உழைத்து இந்த மாவட்டத்தை தமிழகத்தில் தலைசிறந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும். அதற்கு அனைவருடைய முழு ஒத்துழைப்பும் அவசியம்’ என்றார்.

பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறுகையில், திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற வருவாய்த்துறையில் மொத்தம் 179 பணிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் பிற மாவட்டங்களில் இருந்து வர இருக்கிறார்கள். காலிப்பணியிடங்களுக்கு தேர்வாணையம் மூலம் ஆட்கள் நிரப்பப்படுவார்கள். ஓரிரு வாரங்களில் அலுவலர்கள் அனைவரும் பணி அமர்த்தப்படுவார்கள். மக்கள் எந்த பிரச்சினையானாலும் நேரில் மனுக்களை வழங்கலாம்’ என்றார்.

Next Story