திருவாடானை தாலுகாவில், மருங்கூர் கண்மாய் நிரம்பி கடலுக்கு செல்லும் உபரிநீர்


திருவாடானை தாலுகாவில், மருங்கூர் கண்மாய் நிரம்பி கடலுக்கு செல்லும் உபரிநீர்
x
தினத்தந்தி 4 Dec 2019 4:00 AM IST (Updated: 4 Dec 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகாவில் உள்ள மருங்கூர் கண்மாய் நிரம்பியதை தொடர்ந்து உபரிநீர் கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

தொண்டி, 

திருவாடானை தாலுகாவில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழை காரணமாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எட்டிசேரி மேலணை, கட்டவிளாகம், உடையன சமுத்திரம், புதுவயல், மருங்கூர் ஆகிய கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.

இந்தநிலையில் மருங்கூர் கண்மாய் முழுமையாக நிரம்பியதை தொடர்ந்து உபரிநீர் அதிக அளவில் வெளியேறி கடலில் கலந்து வருகிறது. இதுதவிர இப்பகுதியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள் தற்போது சுமார் 70 சதவீதம் வரை நிரம்பியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் சில கண்மாய்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

அதனைத்தொடர்ந்து கண்மாய் உடைப்பை உடனடியாக சரி செய்யவும், பாதிப்புகள் ஏற்படும் முன்பாக தடுக்க பொதுப்பணித்துறை சார்பில் மணல் மூடைகள், கம்புகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்தமிழ் அரசன் மற்றும் பொதுப்பணி துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்மாய்கள் நிறைந்து வருவதையும், அதன் கொள்ளளவுகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story