மாவட்ட செய்திகள்

ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது + "||" + Ambulance The baby was born

ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது

ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது
காஞ்சீபுரத்தை அடுத்த ராஜகுளம் கிராமம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது அஸ்வினிக்கு சுகபிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் வேடல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி அஸ்வினி (வயது26). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக ஆம்புலன்சில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காஞ்சீபுரத்தை அடுத்த ராஜகுளம் கிராமம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது அஸ்வினிக்கு சுகபிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.


ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் பூபாலன், டிரைவர் சந்தானம் ஆகியோர் உதவியுடன் அந்த பெண் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.