மாவட்ட செய்திகள்

சேலத்தில், முகவரி கேட்பது போல் நடித்து நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + In Salem, pretending to be addressing 5 pound jewelry flushed from woman who went for a walking

சேலத்தில், முகவரி கேட்பது போல் நடித்து நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சேலத்தில், முகவரி கேட்பது போல் நடித்து நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சேலத்தில் முகவரி கேட்பது போல் நடித்து நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம், 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மனைவி பத்மா(வயது 56). இவர் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மகன் வீட்டுக்கு வந்தார்.

நேற்று அதிகாலை பத்மா அருண்நகர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

அவர்கள் பத்மா அருகே வந்ததும் முகவரி கேட்பதுபோல் அவரிடம் கேட்டனர். இதற்கு அவர் இந்த முகவரி தனக்கு தெரியாது என்று அவர்களிடம் தெரிவித்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் திடீரென பத்மா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் என்று கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வருவதற்குள் நகையுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை வீடு விற்ற பணத்தை கணவர் கொடுக்காததால் பரிதாப முடிவு
லால்குடி அருகே, வீடு விற்ற பணத்தை கணவர் கொடுக்காததால் வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
2. வி.கைகாட்டி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி பெண் பலி
வி.கைகாட்டி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி பெண் பலியானார்.
3. காதலன் வீட்டு முன்பு 2-வது நாளாக குழந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா
திட்டச்சேரி அருகே காதலன் வீட்டு முன்பு மாற்றுத்திறனாளி பெண் நேற்று 2-வதுநாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
4. குடும்ப தகராறில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை காயத்துடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை
குடும்ப தகராறில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார். காயத்துடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
5. முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் பெண் பிணம் போலீசார் விசாரணை
பண்ருட்டி அருகே அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.