கர்நாடகத்தில் 15 தொகுதி இடைத்தேர்தல் செலவு ரூ.30 கோடி என தகவல்


கர்நாடகத்தில் 15 தொகுதி இடைத்தேர்தல் செலவு ரூ.30 கோடி என தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 5 Dec 2019 6:34 PM GMT)

கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் செலவு ரூ.30 கோடியை தொடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் செலவு ரூ.30 கோடியை தொடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

15 தொகுதி இடைத்தேர்தல்

பெங்களூரு யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், சிவாஜிநகர், மகாலட்சுமி லே-அவுட் உள்பட கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று நடந்து முடிவடைந்தது.

இடைத்தேர்தல் என்ற போதிலும் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான பேட்டரிகள், அதிகாரிகள், ஊழியர்கள் நியமனம், வாக்குச்சாவடி அமைத்தல், போக்குவரத்து செலவு என்று பல்வேறு வகைகளில் செலவுகள் ஆகின்றன.

ரூ.30 கோடி செலவாகும்...

இந்த நிலையில் 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்வதற்கு ஒரு தொகுதிக்கு சுமார் ரூ.2 கோடி என்று மொத்தம் ரூ.30 கோடி செலவாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ரூ.10 கோடி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்காக செலவழிக்கும் நிலை உள்ளது. இதற்கு முன்பு அதாவது கர்நாடகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க ரூ.286.59 கோடியும், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ320.16 கோடியும், 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு ரூ.393.07 கோடியும் செலவானது குறிப்பிடத்தக்கது.

Next Story