தீக்குளித்து பெண் தற்கொலை: ஸ்டூடியோ அதிபர் கைது


தீக்குளித்து பெண் தற்கொலை: ஸ்டூடியோ அதிபர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-06T01:57:24+05:30)

உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததால் பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்தது தொடர்பாக ஸ்டூடியோ உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

அரியாங்குப்பம், 

புதுச்சேரி சின்னக்கடை வீதியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் அரியாங்குப்பத்தை சேர்ந்த 30 வயது பெண் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி அந்த பெண் வீட்டில் தனது உடலில் மண்எண்ெணயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

முன்னதாக அவரிடம் புதுச்சேரி நீதிபதி சிவக்குமார் மரண வாக்குமூலம் பெற்றார். அப்போது அந்த பெண் தன்னை உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அவருக்கே திருமணம் செய்து வைக்க பேசியபோது மதுரை ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது. இதனால் மனமுடைந்து இந்த முடிவை தேடிக் கொண்டதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்தார்.

அதன்பேரில் அரியாங்குப்பம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து நேற்று முன்தினம் மதுரையை(வயது 37) போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story