மாவட்ட செய்திகள்

வெள்ளகோவிலில் விஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை + "||" + In vellakovil Eating poison pills yong man committed suicide

வெள்ளகோவிலில் விஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை

வெள்ளகோவிலில் விஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை
வெள்ளகோவிலில் விஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளகோவில், 

மூலனூர் அருகே உள்ள கும்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சக்திவேல் (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வெள்ளகோவிலில் முத்தூர் ரோட்டில் ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார்,

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாலை கடையில் இருந்த சக்திவேல் விஷமாத்திரை சாப்பிட்டு விட்டார். அத்துடன் கடையில் இருந்தவர்களிடம் தான் விஷமாத்திரை சாப்பிட்டு விட்டதாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக சக்திவேலை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.சக்திவேல் எதற்காக விஷமாத்திரை சாப்பிட்டார் என்று தெரியவில்லை. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீசுக்கு பயந்து பீர் பாட்டிலால் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலை
வேப்பேரியில் போலீசுக்கு பயந்து பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2. கிருமாம்பாக்கத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
கிருமாம்பாக்கத்தில் காதல் தோல்வியால் வாலிபர் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
3. ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததன் விளைவாக ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. வெள்ளகோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
வெள்ளகோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.