மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது கார் மோதி - தனியார் நிறுவன ஊழியர் சாவு + "||" + Car collides with scooter Private company employee death

ஸ்கூட்டர் மீது கார் மோதி - தனியார் நிறுவன ஊழியர் சாவு

ஸ்கூட்டர் மீது கார் மோதி - தனியார் நிறுவன ஊழியர் சாவு
குன்றத்தூர் நோக்கி வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூரம் தூக்கி வீசப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், நடேசன் நகரை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 49). மருத்துவத்துறையில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். நேற்று வண்டலூரில் பணியை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே சர்வீஸ் சாலையோரம் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக ஸ்கூட்டரை திருப்பினார்.


அப்போது குன்றத்தூர் நோக்கி வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூரம் தூக்கி வீசப்பட்ட லோகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர், காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பிச்சென்றார்.

இந்த விபத்து காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது
தாம்பரத்தில், அதிவேகமாக வந்த கார் மோதி போலீஸ் ஏட்டு பலியானார். இது தொடர்பாக காரை ஓட்டிவந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
2. சென்னை நுங்கம்பாக்கத்தில் சொகுசு கார் மோதி வாலிபர் படுகாயம் பிரபல தொழில் அதிபரின் மகன் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் சொகுசு கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்துக்கு காரணமான பிரபல தொழில் அதிபரின் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
ராஜஸ்தானில் நேற்று நடந்த தேசிய கார் பந்தயத்தின் போது பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
4. செய்யூர் அருகே கார் மோதி தந்தை, மகள் பலி
செய்யூர் அருகே கார் மோதி தந்தை, மகள் பலியானார்கள்.