மாவட்ட செய்திகள்

பவானி அருகே பரிதாபம்: நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல் - பேராசிரியர் பலி + "||" + Who was standing Car collision with truck Professor Kills

பவானி அருகே பரிதாபம்: நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல் - பேராசிரியர் பலி

பவானி அருகே பரிதாபம்: நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல் - பேராசிரியர் பலி
பவானி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பேராசிரியர் பரிதாபமாக இறந்தார்.
பவானி,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா நகர் பகுதிைய சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சுதா.


இந்த நிலையில் கணேஷ்குமார் சொந்தவேலை விஷயமாக ஈரோடு மாவட்டம் கோபிெசட்டிபாளையம் சென்றுவிட்டு குமாரபாளையத்துக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் பவானியை அடுத்த சித்தோடு கோணவாய்க்கால் பிரிவு அருகே வந்தபோது ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கணேஷ்குமாரின் கார் மோதியது.

இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கணேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை