மாவட்ட செய்திகள்

மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Transfer the wine shop to another location Lawyers Association protest

மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் என ஏராளமானவை செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு-சென்னை சாலை செங்கல்பட்டில் 2 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடைகளின் அருகே செங்கல்பட்டு தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் என ஏராளமானவை செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இந்த சாலை விளங்குகிறது. இந்த மதுக்கடைகளை இங்கு இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தியும், அரசு மதுக்கடை பெயர் பலகை அருகே தனியார் மதுக்கடை பெயர்பலகை வைத்ததை கண்டித்தும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வக்கீல்கள் சங்கத்தினர் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறிய பின்னர் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர்.