மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே, சிறுமியை கர்ப்பமாக்கிய டி.வி. மெக்கானிக் கைது + "||" + Near Thoothukudi, The little girl became pregnant TV The mechanic's arrest

தூத்துக்குடி அருகே, சிறுமியை கர்ப்பமாக்கிய டி.வி. மெக்கானிக் கைது

தூத்துக்குடி அருகே, சிறுமியை கர்ப்பமாக்கிய டி.வி. மெக்கானிக் கைது
தூத்துக்குடி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய டி.வி. மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே 16 வயது சிறுமி ஒருவருக்கு சமீபத்தில் இறந்த நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. இதனை சிறுமியின் குடும்பத்தினர் யாருக்கும் தெரிவிக்காமல் தங்கள் வீட்டின் பின்புறம் புதைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதுக்கோட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடமும், அவளின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

16 வயதான சிறுமிக்கு தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் கீழத்தெருவை சேர்ந்த டி.வி.மெக்கானிக்கான ராஜூ (வயது 48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுமியை ராஜூ பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பிறந்தது. குழந்தை இறந்து பிறந்ததால் குடும்பத்தினர் வீட்டின் பின்புறத்தில் குழந்தையின் உடலை புதைத்தது தெரியவந்தது. இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்த னர். புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது தாராபுரம் அருகே சம்பவம்
தாராபுரம் அருகே காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.