காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3¼ லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர் கலெக்டர் பேச்சு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3¼ லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 20 Dec 2019 10:00 PM GMT (Updated: 20 Dec 2019 7:23 PM GMT)

காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ச்சி துறை சார்பில், தொழில் நெறி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. முன்னதாக கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்பு குறித்த கண்காட்சியை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கருத்தரங்கில், வேலை வாய்ப்பு குறித்த கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் இடமாக இருந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திறன் வளர்ப்பு மையமாக மாறி உள்ளது. திறன் வளர்ப்பு இன்றைய சூழலில் கட்டாயம் தேவைப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 26 ஆயிரம் பேர் வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர். மாநில அரசு மற்றும் மத்திய அரசு என, எந்த அரசு பணியாக இருந்தாலும், திறனை வளர்த்துக் கொண்டால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். வங்கி, ரெயில்வே போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

அந்த துறை சம்பந்தமான விவரங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். கல்லூரிகளுக்கு சொற்ப எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டி புத்தகங்கள், ஒவ்வொரு மாணவரின் கைகளை சென்றடைய வேண்டும். அதற்கான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்ய தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story