திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த மகா தீபம் 11 நாட்கள் மலையில் உச்சியில் காட்சி அளித்தது. நேற்று முன்தினம் மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரையை மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இரவு 7 மணி அளவில் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலையாகவே காட்சியளித்தது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story