ரூ.94 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.4¼ லட்சம் மோசடி - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


ரூ.94 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.4¼ லட்சம் மோசடி - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 27 Dec 2019 3:45 AM IST (Updated: 26 Dec 2019 10:58 PM IST)
t-max-icont-min-icon

ரூ.94 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

வேலூர், 

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது32), இவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த நவம்பர் மாதம் 12-ந் தேதி எனது மெயிலுக்கு ஒரு செய்திவந்தது. அதில் எனக்கு ரூ.94 லட்சம் நோக்கிய பரிசு விழுந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. மேலும் இங்கிலாந்தில் இருந்து ஜான்மார்ட்டின் என்பவர் போன் மூலம் இந்த தகவலை தெரிவித்தார். பரிசு பொருள் டெல்லி விமான நிலையத்தில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்தில் இருப்பதாகவும், ரூ.10 ஆயிரத்து 300 செலுத்தினால் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, ரூ.10 ஆயிரத்து 300 செலுத்தினேன். பின்னர் தொடர்ந்து பலமுறை இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டார். மொத்தம் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் பெற்றுக்கொண்டார். அதன்பிறகுதான் இவை ஏமாற்று வேலை என்பது தெரியவந்தது. எனவே எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Next Story