புதுச்சேரியில் இருந்து, மினிலாரியில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 வாலிபர்கள் கைது
புதுச்சேரியில் இருந்து புதுப்பேட்டைக்கு மினிலாரியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுப்பேட்டை,
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராசன் உத்தரவின் பேரில், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் புதுப்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் மெயின் ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிலாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 19 அட்டை பெட்டிகளில் 950 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது தெரிந்தது. மேலும் 120 லிட்டர் சாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மினிலாரியில் வந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சூர்யா(வயது 24), ஏழுமலை மகன் ஆனந்தன் (25) என்பதும், புதுச்சேரியில் இருந்து புதுப்பேட்டைக்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சூர்யா, ஆனந்தன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story