தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கட்டுக்குள் இருப்பதற்கு, அமைதியாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலே எடுத்துக்காட்டு - அமைச்சர் பாஸ்கரன் பேட்டி
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது என்பதற்கு, அமைதியாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் எடுத்துக்காட்டாக உள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
சிவகங்கை,
மாவட்டத்தில் ஊரக ஊள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம் மற்றும் இளையான்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
அமைச்சர் பாஸ்கரன் சிவகங்கையை அடுத்த தமறாக்கி கிராமத்தை சேர்ந்தவர். நேற்று அவர் தமறாக்கியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை கட்டுக்குள் உள்ளது என்பதற்கு அமைதியாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலே எடுத்துக்காட்டு. தேர்தல் பிரசாரத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, செல்லும் இடமெல்லாம் அ.தி.மு.க.விற்கு அதிக வரவேற்பு இருந்தது. எனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story