மின்பகிர்மான வட்ட பணியாளர்களுக்கு ரூ.54 லட்சம் பங்கு ஈவுத்தொகை - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்


மின்பகிர்மான வட்ட பணியாளர்களுக்கு ரூ.54 லட்சம் பங்கு ஈவுத்தொகை - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
x
தினத்தந்தி 30 Dec 2019 4:00 AM IST (Updated: 29 Dec 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

மின்பகிர்மான வட்ட பணியாளர்களுக்கு ரூ.54 லட்சம் பங்கு ஈவுத்தொகையை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட பணியாளர்களுக்கு கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் சார்பில் பங்கு ஈவுத்தொகை மற்றும் சிக்கன சேமிப்பு தொகைக்கு வட்டி வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. தலைவர் சி.ஞானசேகரன் தலைமை தாங்கினார். இயக்குனர் சி.ரங்கநாதன் வரவேற்றார். துணைத்தலைவர் எம்.நீலமேகம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு 1,100 பணியாளர்களுக்கு ரூ.54 லட்சம் பங்கு ஈவுத்தொகை வழங்கி பேசுகையில், ‘திருப்பத்தூர் மின்பகிர்மான பணியாளர்கள் அலுவலர்கள் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் இந்த ஆண்டு ரூ.27 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிகர லாபமாக ரூ.42 லட்சம் கிடைத்துள்ளது. காப்பீட்டு தொகையாக ரூ.65 லட்சம் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கம் சிறப்பாக செயல்படுகிறது’ என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமே‌‌ஷ், மாவட்ட கூட்டுறவு சங்க அச்சக தலைவர் டி.டி.குமார், டி.டி.சி.சங்கர், கே.எஸ்.சாமிக்கண்ணு, மின் பிரிவு அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலாளர் டி.விஜயரங்கன், மாவட்ட செயலாளர் சாந்தமூர்த்தி உள்பட பலர் பேசினர். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் டி.சந்திரன், கே.ஆர்.சரவணன், ஏ.சந்திரசேகர், ஜி.யுவராணி, சீனிவாசன், எஸ்.சிவசீலன், எஸ்.ஜோதி, வி.எஸ்.வினோதினி, வி.சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் கே.எஸ்.வினோத்குமார் நன்றி கூறினார்.

Next Story