மாவட்ட செய்திகள்

திருமங்கலம் அருகே, திருமண ஏக்கம்; ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை + "||" + Marriage nostalgia near Thirumangalam; Railroad Swain Youth Suicide

திருமங்கலம் அருகே, திருமண ஏக்கம்; ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

திருமங்கலம் அருகே, திருமண ஏக்கம்; ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
திருமணமாகாத ஏக்கத்தில் ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருமங்கலம், 

திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் மொக்கையன். கூலி தொழிலாளி. இவருடைய மகன் வைரமணி (வயது25). இவர் வேன் டிரைவராக இருந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வீட்டில் திருமணத்திற்கு பெண்பார்க்க கூறியுள்ளார். வீட்டிலும் தீவிரமாக பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை.

தனக்கு திருமணம் ஆகாதது குறித்து நண்பர்களிடம் தெரிவித்து வேதனைப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த வைரமணி நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் மறவன்குளம் அருகே ஓடும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மதுரை ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணமாகாத விரக்தியில், டிரான்ஸ்பார்மரில் மின்கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை
மயிலாடுதுறை அருகே திருமணமாகாத விரக்தியில் டிரான்ஸ்பார்மரில் மின்கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2. வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்: தாய், மகனை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே பரபரப்பு
செஞ்சி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரது தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த தாய், மகனை கைது செய்ய வேண்டும் என்று கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.