மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி - கிரண்பெடி கருத்து + "||" + If local elections are held Central government funds Kiran Bedi concept

உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி - கிரண்பெடி கருத்து

உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி - கிரண்பெடி கருத்து
உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி உதவியை பெற முடியும் என்று கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, 

மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசுக்கோ அல்லது கவர்னருக்கோ அதிகாரமில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் நிர்வாகியான கவர்னருக்கு சட்டப்படி உள்ள அதிகாரத்தையும் பொறுப்பு விவரத்தையும் முதல்-அமைச்சர் பார்க்கவேண்டும். மத்திய உள்துறையானது மாநில தேர்தல் ஆணையரை வெளிப்படையான போட்டியின் அடிப்படையிலும், நியாயமான செயல்முறையிலும் தேர்வு செய்ய அறிவுறுத்தி உள்ளது. ஆனால் நியமிக்க கூறவில்லை.

அதன்படி தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைத்து தேர்தல் ஆணையரை தேர்வு செய்யவும், தேர்வுக்குழுவின் அமைப்பு மற்றும் விதிமுறைகளை கவா்னர் இறுதி செய்யவும் தெரிவித்துள்ளது. சட்ட வழிமுறைப்படி தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட வேண்டும். முதல்-அமைச்சர் கருத்து முற்றிலும் தவறானது.

மக்களுக்கு சரியான சட்ட மற்றும் நிர்வாக உண்மைகளை தெரிவிக்க வேண்டியது எனது கடமை. புதுவையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால் தற்போது தேர்தல் நடத்த வலியுறுத்துகிறார்கள். உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை தாமதமின்றி அறிவிக்குமாறு அரசு நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. வார்டு வரையறை முடிந்ததும் தேர்தலை தாமதமின்றி அறிவிக்க வேண்டும்.

சட்டப்படியும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படியும் மத்திய அரசு மற்றும் கவர்னர் அலுவலகம் செயல்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் அதற்கான நிதி உதவியை மக்கள் இழந்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலுக்கு பிறகு உருவானவுடன் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி மற்றும் மானியங்களை பெற முடியும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. போட்டி அரசாங்கத்தை நான் நடத்தவில்லை கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்
புதுவையில் போட்டி அரசாங்கத்தை நான் நடத்தவில்லை என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
2. ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தலையிடக் கூடாது - கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்
ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தலையிடக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
3. அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - கவர்னர் கிரண்பெடி அறிவிப்பு
புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவித்துள்ளார். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தனது குடியரசு தின உரையில் கூறியிருப்பதாவது:-
4. என்னிடம் சக்தியை வீணாக்கவேண்டாம்: உங்கள் கட்சி எம்.எல்.ஏ.விடம் சவால் விடுங்கள் - நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதில்
என்னிடம் உங்கள் சக்தியை வீணாக்கவேண்டாம் என்றும் உங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு சவால் விடுங்கள் என்றும் கவர்னர் கிரண்பெடி பதில் அளித்துள்ளார்.
5. ஊழலை தடுக்க மக்கள் ஆதரவு தேவை - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
ஊழலை தடுக்க மக்கள் ஆதரவு தேவை என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-