உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்பு


உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 6 Jan 2020 9:45 PM GMT (Updated: 6 Jan 2020 7:14 PM GMT)

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

விருதுநகர்,

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 20 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், 200 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள், 450 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார், வெற்றி பெற்ற மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அ.தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி, வசந்தி, கணேசன், வேல்ராணி என்கிற உமாமகேஸ்வரி, சுபாஷினி, நாகராஜன், மச்சராஜா, நர்மதா, மகாலட்சுமி, மாலதி, சீனியம்மாள், இந்திரா, வேல்முருகன் ஆகிய 13 பேரும், தி.மு.க.வை சேர்ந்த புவனா, தமிழ்வாணன், பாரதிதாசன், சிவக்குமார், முத்துசெல்வி, பாலச்சந்தர், போஸ் ஆகிய 7 பேரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் சுரேஷ், மகளிர் திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, இணை செயலாளர் ரவி, விருதுநகர் நகர அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் யூனியனில் வட்டார வளர்ச்சி அதிகாரி சீனிவாசன் கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். யூனியன் கவுன்சிலர்கள் சோபனாராஜ், சுமதி, ஈஸ்வரன், சுந்தரபாண்டியன், நாகரத்தினம், திவ்யா, கருப்பசாமி, ராமலட்சுமி, சரோஜா, வடிவுக்கரசி, விஜயலட்சுமி, சரஸ்வதி, ஸ்ரீபிரியா, அமுதா, மாலா, முத்துலட்சுமி, கலைச்செல்வி, அழகம்மாள், ராஜம்மாள், ஜெயலட்சுமி, மாரியப்பன், சங்கர்ராஜ், தமிழ்செல்வி, பேச்சியம்மாள், அப்துல்ரகுமான் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து முன்னிலையில் மூத்த உறுப்பினர் நிர்மலா கடற்கரைராஜ் உள்பட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேரும், தி.மு.க. கவுன்சிலர்கள் 8 பேரும், ம.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும், பா.ஜனதா கவுன்சிலர் ஒருவரும் பதவி பிரமாணம் மற்றும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் அலுவலர்கள் செல்லப்பா, காமேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை ஒன்றியம் செட்டிகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக கே.வி.கே.ஆர். பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்க வந்த அவரை ஊர் பொதுமக்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதைதொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் சித்ரா முன்னிலையில் அவர் பதவியேற்றார். அதனை தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் மீனாட்சி, அருட்செல்வி, சத்தியமூர்த்தி, அழகுமலை கண்ணன், சித்ரா, தர்மராஜ், பிரேமா, கண்ணம்மாள், முத்துமாரி ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.

வெம்பக்கோட்டை யூனியனில் மொத்தமுள்ள 20 இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருந்தது.

கவுன்சிலர்கள் பதவி ஏற்புவிழா யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரி சவுந்திரராஜன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், மணிகண்டன், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, மாவட்ட பேரவை துணைதலைவர் ரவிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தி.மு.க.வை சேர்ந்த 15 பேரும், அ.தி.மு.க.வை சேர்ந்த 9 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட வளங்கள் அலுவலர் செல்வகுமார் அனைவருக்கும் பதவிபிரமாணம் செய்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டிஸ்வரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூர் பஞ்சாயத்து தலைவராக இசைக்கிராஜாவுக்கு தேர்தல் அலுவலர் ஹரிஹரன் பதவிபிரமாணம் செய்து வைத்தார். செயலாளர் பாஸ்கரன் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவராக முத்துலட்சுமிவைரமுத்துவுக்கு தேர்தல் அலுவலர்திருமலைச்செல்வி பதவிபிரமாணம் செய்து வைத்தார். ஊராட்சி செயலாளர் தர்மராஜ் மற்றும் ஊர் நாட்டாண்மைகள், பொதுமக்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 12 வார்டுகள் உள்ளன. இதில் 8 வார்டுகளில் தி.மு.க.வும் 4 வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் பதவியேற்றனர். பதவி ஏற்பதற்கு முன்பு ஒன்றிய கவுன்சிலர்கள் காரியாபட்டியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலை, மருதுபாண்டியர்உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 14 வார்டுகள் உள்ளன. இதில் வெற்றி பெற்றவர்கள் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் உள்ள கவுன்சில் கூட்ட அரங்கில் பதவியேற்றுக்கொண்டனர்.

திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி உதவி இயக்குனர் விஷ்ணுபரன், தலைமையிலும் கவுன்சிலர் பொன்னுத்தம்பிமுன்னிலையிலும் ஒன்றிய கவுன்சிலர்கள் சந்தன பாண்டியன், நாகஜோதி, அன்னலட்சுமி, ராமலிங்கம், நரசிங்க பெருமாள், முனியாண்டி, காளிஸ்வரி, பராசக்தி, விமலா, பூமயில், மூக்கையன், புஷ்பம், காமிலா பர்வின், ஆசைத்தம்பி ஆகிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா யூனியன் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் விருதுநகர் உதவி ஆணையர் (கலால்) முருகன், வட்டார வளர்ச்சி அதிகாரியும் தேர்தல் அலுவலருமான சிவகுமார், உதவி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ராமமூர்த்தி, முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மல்லி ஆறுமுகம் நிலவள வங்கி தலைவரும் சந்திரபிரபா எம்.எல்.ஏ.வின் கணவருமான முத்தையா உள்பட அனைத்து கவுன்சிலர்களும் பதவி ஏற்றார்கள்.

அதிகாரிகள் கூறும்போது வருகிற 11-ந் தேதி காலை தலைவர் தேர்தலும் பிற்பகல் 3 மணியளவில் துணை தலைவர் தேர்தலும் நடைபெறும் என தெரிவித்தனர்.

Next Story