பெண்கள், குழந்தைகள் நலத்துறை கிடைத்ததில் மகிழ்ச்சி; காங்கிரஸ் பெண் மந்திரி பேட்டி


பெண்கள், குழந்தைகள் நலத்துறை கிடைத்ததில் மகிழ்ச்சி; காங்கிரஸ் பெண் மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 7 Jan 2020 12:22 AM GMT (Updated: 7 Jan 2020 12:22 AM GMT)

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசில் பதவி ஏற்ற மந்திரிகளுக்கு நேற்றுமுன்தினம் இலாகா ஒதுக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்த இலாகா கிடைக்கவில்லை என காங்கிரசை சேர்ந்த ஒரு தரப்பினர் அதிருப்தி அடைந்தனர்.

மும்பை,

காங்கிரஸ் கட்சியின் பெண் மந்திரியான யசோமதி தாக்குருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மந்திரி யசோமதி தாக்குர் கூறியதாவது:-

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இலாகா கிடைக்காமல் வேறு துறை கிடைத்திருந்தாலும் நான் இன்னும் மகிழ்ச்சி அடைந்து இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்த தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்வேன். பெண்கள் தன்னிறைவு பெறுவதும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளின் இறப்பை குறைப்பதும் தனது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story