மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைகளில் கூட்டநெரிசலை தவிர்க்க பகுதி வாரியாக பொங்கல் பரிசு - கலெக்டர் தகவல் + "||" + Avoid crowding in ration shopsPart Pongal Gift - Collector Information

ரேஷன் கடைகளில் கூட்டநெரிசலை தவிர்க்க பகுதி வாரியாக பொங்கல் பரிசு - கலெக்டர் தகவல்

ரேஷன் கடைகளில் கூட்டநெரிசலை தவிர்க்க பகுதி வாரியாக பொங்கல் பரிசு - கலெக்டர் தகவல்
ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க பகுதி வாரியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை,

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீள கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ஆயிரம் ரூபாயும் அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து மாவட்டத்தில் அமைச்சா் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் கடந்த 5-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 12-ந்தேதி வரை பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது. இதில் வாங்க தவறியவர்களுக்கும், விடுப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படும். மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பகுதி வாரியாக வழங்கப்படும். அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அறிவிக்கப்படும்.

அதன்படி, குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுச் செல்லலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இறந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு ரூ.17 ஆயிரம் நிதி உதவி - கலெக்டர் வழங்கினார்
இறந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு ரூ.17 ஆயிரம் நிதி உதவியை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
2. நெல் கொள்முதல் நிலையங்கள் மேலும் 7 இடங்களில் திறக்கப்படும் - கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் ஏற்கனவே 38 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், மேலும் 7 இடத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
3. குடியரசு தின விழாவில் 129 பேருக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கினார்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் ஜெயகாந்தன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
4. மாற்றுத்திறனாளிகளுக்காக வழிபாட்டு தலங்களில் சாய்தள பாதை - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் சென்று வர வசதியாக வழிபாட்டு தலங்களில் சாய்தள பாதை அமைத்து தரப்படும் என கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
5. மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த வாலிபர் மீட்பு - கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை
மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த வாலிபர் கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கையால் மீட்கப்பட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை