கன்னியாகுமரி -புதுச்சேரி ரெயிலை தினசரி இயக்க வேண்டும் - பயணிகள் சங்கம் வலியுறுத்தல்


கன்னியாகுமரி -புதுச்சேரி ரெயிலை தினசரி இயக்க வேண்டும் - பயணிகள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jan 2020 10:15 PM GMT (Updated: 2020-01-10T20:16:51+05:30)

கன்னியாகுமரி -புதுச்சேரி ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

நெல்லை, 

ரெயில் பயணிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட கூட்டம் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட தலைவர் ஹலீல் ரகுமான் தலைமை தாங்கினார். பொருளாளர் முகமது மைதீன் என்ற முத்து வாப்பா முன்னிலை வகித்தார்.

பொதுச் செயலாளர் நைனா முகமது அறிக்கை சமர்ப்பித்தார். இணை செயலாளர் அரிகரபுத்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில், “புதுச்சேரி -கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் வாராந்திர ரெயிலை, தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும். மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்க வேண்டும்” என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத்தலைவர் சதீஷ்குமார், புரவலர் செந்தில்வேல் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச் செயலாளர் முகமது சிராஜூதின் நன்றி கூறினார்.

Next Story