சாலை பாதுகாப்பை வாழ்நாள் பணியாக கடைபிடிக்க வேண்டும்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
சாலை பாதுகாப்பை வாழ்நாள் பணியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.
மும்பை,
மும்பை நரிமன்பாயிண்டில் நேற்று சாலை பாதுகாப்பு வார தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாலை பாதுகாப்பு மிக முக்கியமானது. இதை ஒரு வாரத்திற்கு மட்டும் கடைபிடிப்பதோடு விட்டு விடாமல் வாழ்நாள் பணியாக கடைபிடிக்க வேண்டும். சாலை விபத்துகளின் எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவது சாத்தியமில்லை. ஆனால் அவற்றின் எண்ணிக்கை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதை செய்ய மாநில அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
2005-ம் ஆண்டில் சீனாவில் 94 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்தன. இந்தியாவில் 98 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்தது. தற்போது சீனாவில் விபத்துகளின் எண்ணிக்கை 45 ஆயிரமாக குறைந்து உள்ளது. ஆனால் இந்தியாவில் 1½ லட்சமாக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.
விழாவில் மாநில போக்குவரத்து மந்திரி அனில் பரப் பேசுகையில், மராட்டியத்தில் கடந்த ஒரு வருடத்தில் நடந்த சாலை விபத்துகளில் 12 ஆயிரத்து 556 பேர் இறந்து உள்ளனர். சாலை விபத்துகளின் எண்ணிக்கை 10 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story