தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை - குளச்சல் அருகே பரிதாபம்


தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை - குளச்சல் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 14 Jan 2020 4:15 AM IST (Updated: 14 Jan 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

குளச்சல், 

குளச்சல் அருகே கோடிமுனை பிரண்ட்ஸ் காலனியை சேர்ந்தவர் சகாய கென்னடி. இவரது மகள் எஸ்தர் மேரி (வயது 19). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தேர்வில் 2 பாடங்கள் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. அவரை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால், அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அறையில் தூங்க சென்றார்.

நேற்று காலையில் தாயார் அறைக்கு சென்ற போது எஸ்தர் மேரி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்ததும் தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story