வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக 24,535 விண்ணப்பங்கள்; கலெக்டர் அன்பழகன் தகவல்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக 24,535 விண்ணப்பங்கள்; கலெக்டர் அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 14 Jan 2020 10:45 PM GMT (Updated: 14 Jan 2020 1:46 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக 24 ஆயிரத்து 535 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கரூர், 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக, கடந்த மாதம் 23–ந்தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள், குறிப்பாக 2020–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதியை தகுதி நாளாக கொண்டு தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபட்டு இருப்பின், அவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்திடவும், வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்க்கப்பட்ட விவரங்களை அறிந்து கொள்ளவும் ஏதுவாக சிறப்பு முகாம், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 4 நாட்கள் நடந்தது.

இதில் பெயர் சேர்த்தலுக்கான படிவம் 6, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்த்தல் படிவம் 6ஏ, பெயர் நீக்கத்துக்கான படிவம் 7, திருத்தம் மேற்கொள்வதற்கான படிவம் 8, சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முகவரி மாற்றத்துக்கான படிவம் 8ஏ ஆகியவற்றை தகுதியின் அடிப்படையில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பொதுமக்கள் பூர்த்தி செய்து வழங்கினார்கள்.

இதில் அரவக்குறிச்சி தொகுதியில் 6,869 விண்ணப்பங்களும், கரூர் தொகுதியில் 5,759 விண்ணப்பங்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 5,439 விண்ணப்பங்களும், குளித்தலை தொகுதியில் 6,468 விண்ணப்பங்களும் என மொத்தம் 24 ஆயிரத்து 535 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த தகவலை கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் தெரிவித்துள்ளார்.


Next Story