மாவட்ட செய்திகள்

தென்னிந்திய திருச்சபை ‘சினாட்’ பேரவையின் புதிய பிரதம பேராயராக தர்மராஜ் ரெசாலம் தேர்வு + "||" + Dharmaraj Resalam elected as new Archbishop of the Synod of the South Indian Church

தென்னிந்திய திருச்சபை ‘சினாட்’ பேரவையின் புதிய பிரதம பேராயராக தர்மராஜ் ரெசாலம் தேர்வு

தென்னிந்திய திருச்சபை ‘சினாட்’ பேரவையின் புதிய பிரதம பேராயராக தர்மராஜ் ரெசாலம் தேர்வு
தென்னிந்திய திருச்சபை ‘சினாட்’ பேரவையின் புதிய பிரதம பேராயராக திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் தர்மராஜ் ரெசாலம் தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி, 

திருச்சி பி‌ஷப் ஹீபர் கல்லூரியில் தென்னிந்திய திருச்சபையின் 36–வது ‘சினாட்’ பேரவை கூட்டம் கடந்த 11–ந் தேதி தொடங்கி தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போதைய பிரதம பேராயர் தாமஸ் கே.ஓமன் தலைமை தாங்கினார். துணை பிரதம பேராயர் வடபள்ளி பிரசாத்ராவ், பொதுச்செயலாளர் டாக்டர் ரத்னகரா சதானந்தா மற்றும் பொருளாளர் வக்கீல் ராபர்ட் புரூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பேரவை கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 24 திருமண்டலங்களை சேர்ந்த 24 பேராயர்கள் மற்றும் 350 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு குழுக்களின் விவாதம் நடந்தது. அடுத்த 3 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது குறித்து பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அத்துடன் 3 ஆண்டுக்கான செயல்திட்டங்களும் வகுக்கப்பட்டன. ‘சினாட்’ மாமன்ற உறுப்பினர்களை மகிழ்விக்க திருச்சி கலைக்காவிரி கல்லூரி குழுவினரின் சிறப்பு கலை நிகழ்ச்சியும் நடந்தன.

நிறைவு நாளான நேற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தென்னிந்திய திருச்சபையின் ‘சினாட்’ பேரவையின் புதிய பிரதம பேராயராக கேரள மாநில திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் தர்மராஜ் ரெசாலம், துணை பிரதம பேராயராக தெலுங்கானா மாநிலம் ஹரீம் நகரை சேர்ந்த ரூபென் மார்க், பொதுச்செயலாளராக மதுரையை சேர்ந்த வக்கீல் பெர்னாண்டஸ் ரத்தினராஜா, பொருளாளராக தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்த டாக்டர் விமல்சுகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். தொடர்ந்து பல்வேறு செயல் திட்டங்கள் தீட்டப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை திருச்சி–தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...