தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி 3 பேர் படுகாயம்


தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Jan 2020 4:30 AM IST (Updated: 23 Jan 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் மாதேவப்பா (வயது 32), நாேக‌‌ஷ், கிரு‌‌ஷ்ணன். தொழிலாளிகள். நேற்று காலை அவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் தேன்கனிக்கோட்டையில் இருந்து பாலதோட்டனப்பள்ளி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

ரங்கசந்திரம் பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது எதிரே கவுதாளம் கிராமத்தை சேர்ந்த ராஜே‌‌ஷ் என்பவர் வந்த மோட்டார்சைக்கிளும், அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

தொழிலாளி சாவு

இந்த விபத்தில் மாதேவப்பாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், நாகே‌‌ஷ், கிரு‌‌ஷ்ணன், ராஜே‌‌ஷ் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதேவப்பா பரிதாபமாக இறந்தார். மாதேவப்பாவின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story