குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - முத்துப்பேட்டையில் நடந்தது
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
நகர செயலாளர் செல்லதுரை வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், அனைத்து தரப்பு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகவும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், வீரமணி, வீரசேகரன், கிளை செயலாளர் காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story