12-ந்தேதி புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் - அதிகாரபூர்வ அறிவிப்பு
புதுவை சட்டசபை சிறப்பு கூட்டம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
புதுச்சேரி,
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் 6-ந்தேதி வரை நடந்தது. அதன்பின் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டசபை சிறப்பு கூட்டம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை சட்டசபை செயலர் வின்சென்ட்ராயர் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிவிப்பில், புதுவை சட்டசபை வரும் 12-ந்தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து சட்ட சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. புதுவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்த சட்டம் தொடர்பாக சட்டசபையில் விவாதிப்போம் என்றும் கூறினார். எனவே வருகிற 12-ந்தேதி கூடும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story