பெங்களூரு லால்பாக்கை மேலும் மேம்படுத்த முடிவு மந்திரி சோமண்ணா பேட்டி


பெங்களூரு லால்பாக்கை மேலும் மேம்படுத்த முடிவு மந்திரி சோமண்ணா பேட்டி
x
தினத்தந்தி 28 Jan 2020 10:00 PM GMT (Updated: 28 Jan 2020 8:28 PM GMT)

பெங்களூரு லால்பாக் மேலும் மேம்படுத்தப்படும் என்று மந்திரி சோமண்ணா கூறினார்.

பெங்களூரு,

வீட்டு வசதி மற்றும் தோட்டக்கலைத்துறை மந்திரி சோமண்ணா நேற்று பெங்களூரு லால்பாக்கில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நடைபயிற்சியில் பங்கேற்றவர்கள், பல்வேறு வசதிகளை செய்து தருமாறு மந்திரியிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகு மந்திரி சோமண்ணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு லால்பாக்கை மேலும் மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 3-ந் தேதி ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார். இதில் அதுபற்றி விவாதிக்கப்படும். மந்திரிசபை இந்த மாத இறுதிக்குள் நிச்சயம் விரிவாக்கம் செய்யப்படும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதில் எந்த குழப்பமும் இல்லை.

மந்திரிசபையில் இருந்து யாரையும் கைவிடும் திட்டம் இல்லை. ஆனால் இதுபற்றி முடிவு எடுக்க முதல்-மந்திரிக்கு முழு அதிகாரம் உள்ளது. எடியூரப்பா ஒரே இடத்தில் தேங்கிய நீரல்ல. அவருக்கு அபாரமான அனுபவம் உள்ளது. கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விரைவாக முடிவு எடுப்பார்.

ஒட்டுமொத்த கர்நாடகமும் வளர்ச்சி பெற வேண்டும் என்று எடியூரப்பா கனவு கண்டுள்ளார். அவரது இந்த கனவு நிறைவேற நாங்கள் தீவிரமாக பாடுபடுவோம். இவ்வாறு சோமண்ணா கூறினார்.

Next Story