மாவட்ட செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே, வேனில் கடத்திய ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது + "||" + Near Kotakkuppam, Hijacked in a van Rs.3 lakh liquor bottles seized - Driver arrested

கோட்டக்குப்பம் அருகே, வேனில் கடத்திய ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது

கோட்டக்குப்பம் அருகே, வேனில் கடத்திய ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
கோட்டக்குப்பம் அருகே வேனில் கடத்திய ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,

கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவுவிநாயகமூர்த்தி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு வேனை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த வேனுக்குள் 1,920 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வேனை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் காஞ்சீபுரம் காமாட்சியம்மன் காலனி பகுதியை சேர்ந்த வரதராஜன் மகன் மோகன் (வயது 29) என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு வேனில் மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து டிரைவர் மோகனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள வேனையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் இருந்து, மினிலாரியில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 வாலிபர்கள் கைது
புதுச்சேரியில் இருந்து புதுப்பேட்டைக்கு மினிலாரியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
3. விழுப்புரம் அருகே, சரக்கு வாகனத்தில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - தப்பி ஓடிய டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.