மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி - திருத்துறைப்பூண்டியில் நடந்தது + "||" + Against the Citizenship Amendment Act Human Chain - It happened in Tirupathi Poondi

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி - திருத்துறைப்பூண்டியில் நடந்தது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி - திருத்துறைப்பூண்டியில் நடந்தது
திருத்துறைப்பூண்டியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி,

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.

திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகே இந்த போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோ‌‌ஷம் எழுப்பினர்