மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தலையிடக் கூடாது - கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம் + "||" + On the issue of wearing a helmet Elected representatives should not interfere Governor Kiran Bedi Scheme

ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தலையிடக் கூடாது - கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்

ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தலையிடக் கூடாது - கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்
ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தலையிடக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி, 

புதுவையில் 2 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஏன் ஹெல்மெட் அணிவதில்லை? என்ற பொதுவான கேள்வி சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது. இதை நான் முதல்-அமைச்சரிடம் கேளுங்கள் என்று கூறினேன்.

கடந்த 2017-ம் ஆண்டு ஹெல்மெட் அணிவது தொடர்பாக போக்குவரத்து ஆணையர், காவல்துறையினரால் கூட்டு முயற்சி உருவாக்கப்பட்டபோது அவர் அதை வெளிப்படையாக தடுத்தார். அதன்பின் அந்த வேகத்தை மீண்டும் பெற முடிய வில்லை.

ஒரு சிலருக்கு அபராதம் விதிப்பதன் மூலம் சட்டத்தை அமல்படுத்துவதில் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியாது. சட்டத்தை அமலாக்குவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நேரடியாக தடுக்கப்படுகிறது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் விபத்தில் பலியானவர்களின் பாதுகாப்பினை சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதில்லை. இதனால் அவரை சார்ந்த சமூகத்திற்கு வாழ்நாள் முழுவதும் இழப்பு ஏற்படுகிறது.

விபத்தில் இறப்பவர்கள் பெரும்பாலும் இளம் வயதினராக உள்ளனர். எனவே சட்டத்தை அமல்படுத்துவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தலையிடக்கூடாது. இது ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பினை பலவீனப்படுத்துகிறது.

மேலும் அபராதம் விதிப்பது தொடர்பான கோப்பு நீண்ட நாட்களாக அமைச்சரிடம் உள்ளது.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. போட்டி அரசாங்கத்தை நான் நடத்தவில்லை கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்
புதுவையில் போட்டி அரசாங்கத்தை நான் நடத்தவில்லை என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
2. அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - கவர்னர் கிரண்பெடி அறிவிப்பு
புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவித்துள்ளார். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தனது குடியரசு தின உரையில் கூறியிருப்பதாவது:-
3. என்னிடம் சக்தியை வீணாக்கவேண்டாம்: உங்கள் கட்சி எம்.எல்.ஏ.விடம் சவால் விடுங்கள் - நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதில்
என்னிடம் உங்கள் சக்தியை வீணாக்கவேண்டாம் என்றும் உங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு சவால் விடுங்கள் என்றும் கவர்னர் கிரண்பெடி பதில் அளித்துள்ளார்.
4. ஊழலை தடுக்க மக்கள் ஆதரவு தேவை - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
ஊழலை தடுக்க மக்கள் ஆதரவு தேவை என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
5. உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி - கிரண்பெடி கருத்து
உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி உதவியை பெற முடியும் என்று கிரண்பெடி தெரிவித்துள்ளார்.