ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 1 Feb 2020 3:30 AM IST (Updated: 1 Feb 2020 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அபிராமி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 54), இவர் நேற்று முன்தினம் தனது தம்பி வீட்டு கிரகபிரவேசத்திற்கு பூந்தமல்லி அருகே உள்ள அய்யப்பன்தாங்கல் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து நாகராஜன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள வெங்கடேசபுரம் 8-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (26), இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 28-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான வேலூருக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் எல்.இ.டி. டிவி, ஒரு செல்போன், ரூ.500, காமாட்சி விளக்கு, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு போன்றவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சரவணன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story