மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்த ஆலோசனை கூட்டம் + "||" + Advisory Meeting on Issuing Final Voter List at Thoothukudi

தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்த ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்த ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஞானசேகரன் பேசும் போது கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 தொடர்பான பணிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது. ஏற்கனவே பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கப்பட்டது.

மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் தாசில்தார் நம்பிராஜன், வாக்குப்பதிவு அலுவலர்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் பெண்கள், குழந்தைகளுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்: போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பு
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் நடந்த, குழந்தைகள், பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
2. தூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
4. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
5. தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்பனை; 3 கடைக்காரர்கள் கைது
தூத்துக்குடியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 கடைக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.