ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ரூ.5 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம்


ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ரூ.5 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:15 PM GMT (Updated: 14 Feb 2020 4:05 PM GMT)

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.5 கோடியில் அடுக்குமாடி வணிகவளாகம் கட்டப்பட உள்ளது. இதற்காக அங்கிருந்த பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 16 கடைகள் இருந்தன. இந்த கடைகள் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் அந்த கடைகளை இடித்துவிட்டு கூடுதலாக கடைகள் கட்ட திட்டமிடப்பட்டது.

அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அந்த இடத்தில் ரூ.5 கோடியில் வாகனங்கள் நிறுத்தம் வசதியுடன் 40 கடைகள் கொண்ட அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. புதிய கடைகள் கட்ட இருப்பதால் அங்கு ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களை காலிசெய்யுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அவர்களும் கடைகளை காலி செய்து விட்டனர்.

அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக அங்கிருந்த 16 கடைகளையும் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில், 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. வி்ரைவில் புதிய வணிகவளாகம் கட்டும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story