காஞ்சீபுரத்தில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சீபுரத்தில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கே.எஸ்.எம்.நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சீதா (வயது60), மகள் தனலட்சுமி (35). மகன் பாலாஜி (28). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாயும், மகளும் தனியாக வசித்து வந்தனர்.
தொடர்ந்து தனிமையில் இருந்து வந்ததால் சீதா மற்றும் தனலட்சுமிக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் உறவினர்கள், அக்கம்பக்கத்தினருடன் பழகுவதும், பேசுவதும் இல்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், பாலாஜி வேலை முடித்து தன்னுடைய தாய் மற்றும் சகோதரியை பார்க்க நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தாய், மகள் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story