கீழ்பென்னாத்தூரில் 263 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
கீழ்பென்னாத்தூர்,
பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் தசரதன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை பாரதி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.பாண்டுரங்கன் கலந்துகொண்டு, பிளஸ்–1 படிக்கும் 263 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ராஜேந்திரன், பழனி, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் பாலையா, உதவி தலைமை ஆசிரியர் கேசவன், பட்டதாரி ஆசிரியர் முருகன், தொழிற்கல்வி ஆசிரியர் சீனுவாசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story