கோவிலில் வழிபடுவதில் பிரச்சினை: கிராம மக்கள் போராட்டம்


கோவிலில் வழிபடுவதில் பிரச்சினை: கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2020 3:30 AM IST (Updated: 19 Feb 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

ஏழாயிரம் பண்ணை அருகே கோவில் வழிபாட்டில் பிரச்சினையால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ளது மடத்துப்பட்டி கிராமம். இங்கு காளியம்மன் கோவில் வழிபாட்டை விட்டுக்கொடுப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.

கடந்த வாரம் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வழிபாட்டு உரிமை வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து சமாதான கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாததால் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெறும் என கோட்டாட்சியர் அறிவித்தார்.இந்நிலையில் நேற்று காலை காளியம்மன் கோவில்முன் வழிபாட்டு உரிமை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 200 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சாத்தூர் போலீஸ் துணைசூப்பிரண்டு ராமகிருஷ்ணன், ஏழாயிரம் பண்ணை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், தாசில்தார் வி‌ஜயராஜ்பாண்டியன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். மனு கொடுங்கள் கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story