குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: நெல்லையில் 12 ஆயிரம் பேர் மீது வழக்கு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: நெல்லையில் 12 ஆயிரம் பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:15 PM GMT (Updated: 2020-02-20T20:02:15+05:30)

நெல்லையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 12 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நெல்லை, 

நெல்லையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 12 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆர்ப்பாட்டம் 

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை கண்டித்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் அனைத்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. நெல்லையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெற்றது.

போலீசார் இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுத்திருந்தனர். ஆனால் தடையை மீறி அண்ணா சாலையில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். பின்னர் அறிவியம் மையம் முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12 ஆயிரம் பேர் மீது வழக்கு 

இதுதொடர்பாக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட 12 ஆயிரம் பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதாவது 7 ஆயிரம் ஆண்கள், 5 ஆயிரம் பெண்கள் என மொத்தம் 12 ஆயிரம் பேர் மீது தடையை மீறி முற்றுகை போராட்டம் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story