கச்சிராயப்பாளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் சாராயம் பறிமுதல் வாலிபர் கைது


கச்சிராயப்பாளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் சாராயம் பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2020 4:00 AM IST (Updated: 23 Feb 2020 3:44 AM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே தாள்முண்டியூர் கிராமத்தில் ஒரு வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் தாள்முண்டியூர் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இதில் அந்த வீட்டின் பின்புறத்தில் கேன் மற்றும் லாரி டியூப்களில் மொத்தம் 700 லிட்டர் சாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்த னர். இதையடுத்து அந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது

பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து சாராயத்தை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ஜெயராமன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கள்ளக் குறிச்சி சிறையில் அடைத்தனர்.

Next Story