போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை கண்டித்து தர்மபுரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்


போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை கண்டித்து தர்மபுரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2020 4:30 AM IST (Updated: 26 Feb 2020 12:47 AM IST)
t-max-icont-min-icon

போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை கண்டித்து தர்மபுரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 40 பேர் மீது வழக்குப்பதிவு.

தர்மபுரி,

டெல்லியில், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ஜாவித் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பசுலுத்தீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தாக் அகமது, நியாமத், தர்மபுரி நகர தலைவர் அசாருதீன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிலையில் உரிய அனுமதியின்றியும், தடையை மீறியும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 40 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story