சுற்றுலா துறைக்கு தனி பட்ஜெட் மந்திரி ஆதித்ய தாக்கரே வலியுறுத்தல்
மராட்டியத்தில் சுற்றுலா துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என மந்திரி ஆதித்ய தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தானேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே, சுற்றுலாத்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யபட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தனி பட்ஜெட்
மராட்டியத்தில் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாத்துறை மீது கவனம் செலுத்தப்படவில்லை. இருப்பினும், நான் பொறுப்பேற்ற பிறகு நிலைமை மாறியது. இப்போது, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்களது மாவட்டத்துக்கு ஏதாவது செய்ய விரும்புகின்றனர்.
அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய சுற்றுலாத்துறைக்கு போதிய நிதி இல்லை. எனவே, சுற்றுலாத்துறைக்கு நிதி ஒதுக்குவதற்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story