பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி


பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 29 Feb 2020 9:45 PM GMT (Updated: 29 Feb 2020 1:49 PM GMT)

வாலாஜா அருகே பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

வாலாஜா, 

வாலாஜாவை அடுத்த பூண்டி குறுவள மையத்தை சேர்ந்த 14 பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஒருநாள் பயிற்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. குறுவள மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான கே.குமார் தலைமை தாங்கினார். வி.சி.மோட்டூர் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சித்ரா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பொறுப்பாளர் விமலா ஆகியோர் பயிற்சி அளித்தனர். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பயிற்சியில் ஒரு குழுவில் 6 பேர் வீதம் 84 பேர் கலந்து கொண்டனர். பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களின் வருகை, கற்றல் ஆர்வம், அதை பற்றி கருத்து பரிமாணங்கள் நடைபெற்றன. முடிவில் பூண்டி பள்ளி ஆசிரியை மணிமொழி நன்றி கூறினார்.

Next Story