தஞ்சை மாவட்டத்தில், பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்: 27 ஆயிரத்து 970 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை தஞ்சை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 970 பேர் எழுதுகின்றனர்.
தஞ்சாவூர்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. தேர்வு முடிவுகள் அடுத்த மாதம்(ஏப்ரல்) 24-ந் தேதி வெளியிடப்படுகிறது.
முதல்நாளில் மொழிப்பாட தேர்வு நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டு பிளஸ்-2 தேர்வை தஞ்சை மாவட்டத்தில் 221 பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்து 406 மாணவர்களும், 15 ஆயிரத்து 564 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 970 பேர் எழுதுகின்றனர். இவர்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 108 பேரும் அடங்குவர்.
இந்த தேர்வு 101 மையங்களில் நடக்கிறது. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்து பார்க்கலாம். அடுத்த 5 நிமிடம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் சுயவிவரங்கள் சரிபார்க்கலாம். அதன்பின் காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 3 மணிநேரம் தேர்வு எழுதலாம். தேர்வு நேரத்தில் தவறுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
11-ம் வகுப்பு
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 4-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை 223 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 27 மாணவர்களும், 15 ஆயிரத்து 513 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 540 பேர் எழுதுகிறார்கள். இதில் 201 பேர் மாற்றுத்திறனாளி ஆவர்.
10-ம் வகுப்பு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 27-ந்தேதி தொடங்கி அடுத்தமாதம்(ஏப்ரல்) 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை 408 பள்ளிகளை சேர்ந்த 31 ஆயிரத்து 979 மாணவ, மாணவிகள் 129 மையங்களில் எழுதுகிறார்கள்.
இதில் 183 பேர் மாற்றுத்திறனாளி ஆவர். 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 88 ஆயிரத்து 489 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Tags :
Next Story