கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 7 March 2020 11:00 PM GMT (Updated: 7 March 2020 8:22 PM GMT)

கரூரில், மகளிர் தினத்தை யொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கரூர்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார் பில், உலக மகளிர் தினத்தை யொட்டி நேற்று கரூர் தாந் தோணிமலை ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் பெண் களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசினார். ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சிவகாமி வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கோலப்போட்டி, லக்கிகார்னர், பாட்டிலில் நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் என பலர் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.

பரிசளிப்பு

இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், கிறிஸ்டி, பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் ஜெயசித்ரா, ஐஸ்வர்யா, பிரபு, சசிகுமார், பொம்மு ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

வெள்ளியணை

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே காணி யாளம்பட்டியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரியின் முதல்வர் தேன்மொழி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் அமுதா வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் சகிலா கலந்து கொண்டு, இன்றைய நாட்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதற்கு சட்டத்தின் துணை கொண்டு தீர்வு காணும் வழிமுறைகள், பெண்களுக்கான அடிப்படை உரிமைகள், சமுதாயத்தில் பெண்கள் நடந்துகொள்ளவேண்டி விதம், உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதின் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எடுத்துக்கூறினார். முன்னதாக மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் மாணவி ராமதிலகம் நன்றி கூறினார்.


Next Story